முட்டை கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும்.!
முட்டையில் எக்கச்சக்கமான பயன்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் முட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். இந்நிலையில் முட்டை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை. கண்ணில் இருக்கும் கார்னியா விட்டமின் ஏ மூலம் பாதுகக்கப்படுகிறது. கண்ணின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் கார்னியா, கண்புரை மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய் அபாயத்தை குறைக்கின்றன. காலை, மதியம் மற்றும் இரவு உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.




