கர்ப்பிணி பெண்களே, நீங்கள் எந்தெந்த மீன்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..!!

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை நாம் தேடி தேடி உண்பது வழக்கம். அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துடைய உணவுகளை தர முடியுமோ, அனைத்தையும் கொடுப்போம். அப்படி நன்மை தரும் மீன்கள் பலவகையில் உள்ளன. ஆதலால் எந்த வகை மீன்களை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம் என்று இந்த பதிவில் காண்போம்.

பொதுவாக மீன்களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. அதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகிக்கிறது. இது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்த ஒன்றாகும். இந்த ஒமேகா 3 அளவு அதிகமாக இருக்கும் மீன்களை நாம் பார்ப்போம்.

இதில் முக்கியமான மீன் என்றால் அது சால்மன் மீன்தான் இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, பொட்டாசியம் மெக்னீசியம் நியாசின், உயர் ரகப் புரதம் ஆகியன உள்ளன. எனவே இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சரியான மீனாகும். அடுத்தது கானாங்கெளுத்தி மத்தி நெத்திலி ஹாலிபட் சூரை மீன் முரண் கெண்டை ஆகிய மீன்களில் புரதம் கால்சியம் மெக்னீசியம் விட்டமின் ஏ விட்டமின் பி12 நியாசின் அதிகமாக இருக்கின்றன.

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை நாம் மிகத் துல்லியமாகவும் கவனமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்தை சரியாக கொடுக்க வேண்டும். ஆகையால் மேலே குறிப்பிட்டு இரக்கும் மீன்களை கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்வோம்.

Read Previous

தேங்காய் பால் குடிப்பதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தினமும் காபி குடிக்கும் நபரா நீங்கள்..!! உங்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அபாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular