
கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் மீட்க பட்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தந்துள்ளது ராணுவமும் மற்றும் சமூக சேவகர்களும்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரியின் போது துணிச்சலாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ள தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா பல உயிர்களுக்கு சேவைகள் செய்து வந்த நிலையில் அவரின் துணிச்சல் மட்டும் செயலை பாராட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கல்பனா சாவ்லா என்ற விருதை சுதந்திர தின திருநாளான இன்று வழங்கி கௌரவித்துள்ளார்..!!