நாம் அனைவருக்கும் இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும், நாம் அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு தின்பண்டம் தான் குலாப் ஜாமுன். இந்த குலாப் ஜாமுனை பல வகையில் செய்து பார்த்திருப்பீர்கள். பிரட்டை வைத்து செய்து பார்த்திருக்கிறீர்களா. அதை இந்த பதிவில் எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையானவை:
சர்க்கரை,
பிரட்,
எண்ணெய்,
பால்
செய்முறை:
ப்ரெட் துண்டுகளில் இருக்கும் ஓரங்களை நறுக்கி எடுத்து விட வேண்டும். நடுப் பகுதியை எடுத்து அதை நன்றாக பாலில் ஊறவைத்து மாவு போல பிசைய வேண்டும். பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அதன்பின் அந்த உருண்டைகளை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்க வேண்டும்.
பின்னர் சர்க்கரையை வைத்து சர்க்கரை பாகு தயாரித்து அதில் ஏற்கனவே பொறித்து வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட வேண்டும். சிறு உருண்டைகள் பெரிதாக மாறி நன்றாக வெந்து வந்ததும் குலாப் ஜாமுன் தயார். அவ்வளவுதான் மிகவும் சுவையான குலாப் ஜாமுன் உங்களுக்காக.




