குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய பதிவு..!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் பெரும் கவனத்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடன் நிறைய பேசி விளையாட வேண்டும். அதேபோல குழந்தைகள் ஏதேனும் கூற வந்தால் அதையும் கேட்க வேண்டும்.

இல்லையெனில் குழந்தைகள் பெற்றோர்களிடம் எதையும் கூறாமல் தனக்கு கிடைத்திருக்கும் சுற்று வட்டாரத்தை வைத்து வாழ தொடங்கி விடுவார்கள். இதனால் தீய பழக்கங்களுக்கும் ஆளாக வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் தனக்கு தோன்றுவதை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கின்றது. ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி தொடுதல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலாடை இன்றி ஆடை இன்றி குழந்தைகள் நமக்கு குழந்தையாக தெரிந்தாலும் பார்க்கும் எல்லோருக்கும் அப்படி இருக்காது.

ஆகையால் குழந்தைகளை ஆடையின்றி இருக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்பும் பொழுது கவனத்துடன் நாம் இருக்க வேண்டும். இலவசமாக வழங்கப்படும் பொருட்களை வாங்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு நாம் சொல்லி வளர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அவர்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும். ஒருவரின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைக்கக்கூடாது என்றும் வெறுப்பையும் காட்டக்கூடாது என்றும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் நடக்கக்கூடாது என்றும் நாம் புரிய வைக்க வேண்டும்.

பெற்றோர்களாக  இருந்தால் குழந்தைகளுக்கு தேவையான பொழுது பணத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் தங்களது நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் பேசி பழக வேண்டும். அப்போதுதான் தனக்காக இரண்டு பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அந்த குழந்தைக்கு வரும்.

Read Previous

வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!! மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

முட்டை வெகு சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்க இதை செய்யுங்கள் போதும்..!! அசத்தல் டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular