உத்ராகண்ட் மாநிலத்தின் சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்தாகினி ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.