இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாட்டில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் மற்றும் கண்டனம் நடத்தி வருகின்ற நிலையில்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது, இச்சம்பவம் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையிலும் அதிலும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சிறிதும் இல்லை என்று சக மருத்துவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் போராடி வருகின்றனர், போராடியவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த போஸ்டர் அட்டையின் வாசகம் மனதை பதபதைக்க வைத்தது, Bad Touch பற்றி உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுத் தரும்பொழுது உங்கள் மகனும் அறிந்துள்ளானா என்று தெரிந்து கொள்ளுங்கள் இந்த வாசகமானது இணையதளத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!!