
கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!!
கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு “கோத்திறம் அறிந்து பெண் கொடு. பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்பதே சரி. ‘கோ’த்திறம் – கோ என்றால் அரசன் என்று பொருள். கோத்திறம் என்றால் அரசனின் திறமை. ‘பா’த்திறம் – பா என்றால் பாடல் என்று பொருள். ஒரு மன்னனின் திறமையை அறிந்து அவனுக்கு பெண் கொடுக்க வேண்டும். அதே போல ஒரு மன்னம் தன்னுடைய அவையில் கவிபாடும் புலவர்களின் திறமைக்கு ஏற்ப அவன் பரிசு வழங்க வேண்டும்.