
சென்னை அருகே தாம்பரத்தில் மது போதையில் சாலையில் தூங்கிய நபர் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூக்க கலக்கத்தில் இருந்த வாடகை கார் ஓட்டுநர், சாலையில் மது போதையில் படுத்திருந்த ரமணா என்பவர் மீது காரை ஏற்றியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ரமணாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகிவரும் நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.