1980, 90, காலத்தில் பூப்புனித நீராட்டு விழா இப்படித்தான் இருந்தது..!!

1980, 90, காலத்தில் பூப்புனித நீராட்டு விழா இப்படித்தான் இருந்தது..

14, 15, வயது நிரம்பிய ஒரு பெண் பள்ளிக்கூடத்திலயோ,அல்லது தீப்பெட்டி ஆபீஸ்லயோ, பூப்படைந்து விட்டால் உடன் இருக்கும் அவளது தோழிகள் வீட்டுக்கு வந்து விட்டுட்டு போவார்கள்…

அதற்குப் பிறகு அந்த பெண்னின் அத்தைமார்கள், சித்திமார்கள், வீட்டுக்கு வருவார்கள் ஐயோ அண்ணன் மகள் வெறும் களத்தோட இருக்காளே என்று தன் கழுத்தில் இருந்த செயினை எடுத்து அந்தப் பெண்ணுக்கு போடுவார்கள் அதற்கு பிறகு ஒரு தட்டில் கருப்பட்டியும், பால் கொடுப்பார்கள் அந்த பெண் பாலை குடித்து அந்தக் கருப்பட்டியியையும் தின்பாள்… இது ஒரு சடங்கு….

பிறகு ஏதோ ஒரு வீட்டில் பல்லாங்குழி இருக்கும் அந்த பல்லாங்குழியை வாங்கி கொடுத்து அவர்கள் தோழிகள் பல்லாங்குழி விளையாடுவார்கள்..

இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கெல்லாம் சொல்லிவிடுவார்கள் இன்ன கிழமை தலைக்கு தண்ணி ஊத்த போறோம் வாருங்கள் என்று….

#தாய்மாமன் வீட்டுக்கு சென்று தலைக்கு தண்ணி ஊத்த போகிறோம் என்று சொல்வார்கள்… தாய்மாமன் சீர் கொண்டு வருவார்கள்.. சீர் என்றால் ஒரு தாம்பாளத்தில் அந்த பெண்ணுக்கு தேவையான “”பாவாடை” “தாவணி” “பிளவுஸ்” இருக்கும்…. இன்னொரு தாம்பாளத்தில் “முகம் பார்க்கும்- “கண்ணாடி” “சீப்பு “சினுக்கோலி” -“பொட்டு” “வளையல் இவைகள் இருக்கும்… இன்னொரு தாம்பாளத்தில் “வாழைப்பழம் “ஆரஞ்சு” பழம் “திராட்சை -பழம்” “வெத்தல “பாக்கு “சாக்லேட் இவைகள் தான் இருக்கும்….

மைக் செட் கட்டியிருப்பார்கள் மைக் செட்டில் மேளம் போட்டதும் எல்லா ஆட்களும் கூடி விடுவார்கள்..
ஆண்கள் பெண்கள் உட்பட
தலைக்கு தண்ணீர் ஊற்றினதும் ஊர் பெரியவர்கள் அதாவது ஊர் தலைவர் நாட்டாமை என்று சொல்வார்கள்.. அவர்களுக்கு ஒரு டேபிள் போட்டு உட்கார வைத்து வெத்தலை பாக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்து அவர்கள் கையால் கொடுக்க சொல்வார்கள்.. ஊர் தலைவர் நாட்டாமை கடைசி வரைக்கும் இருந்து கொடுத்துவிட்டு போவார்கள்… ஊர் தலைவருக்கும் நாட்டமைக்கும் அவர்கள் தரும் மரியாதை அது…

அப்போதெல்லாம் சாப்பாடு எல்லாம் கிடையாது சர்க்கரைப் பொங்கல் போடுவார்கள் ஒரு இலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்….. வந்தவர்கள் வெத்தலை பாக்கு சக்கரை பொங்கல் சந்தனம் குங்குமம் வைத்து போவார்கள்.
அப்போது செலவுகள் எல்லாம் குறைவாகவே இருந்தது..

இப்போது..
*மைசெட்டு கட்டி *சீரியல் பல்பு எல்லாம் போட்டு பெரிய பெரிய *பேனர்கள் வைத்து
*வீடியோ கேமரா மேன் அங்கும் இங்கும் ஓடி தாய்மாமன் முன்னே நடந்து வர பெண்கள் 21 தாம்பாளத்தில் சீர் *வாழைப்பழத்தாறு பெரிய பெரிய *அண்டா இதெல்லாம் போக தாய்மாமன் வசதியாக இருந்தால் அஞ்சு #பவுனு செயின் இல்லை என்றால் அதற்கு மேலும் *கிடாய் கொண்டு வருகிறார்கள்.. அது போக கேரளா செண்டை மேளம் ஆட்டம் பாட்டம் வானவேடிக்கை
வந்தவர்களுக்கு வயிறார #விருந்து அதற்குப் பிறகு மொய் வைக்கிறார்கள்..
(1980 90 ல் #மொய் எல்லாம் கிடையாது..).

இதெல்லாம் போக மது பிரிவுகளுக்கு மது விருந்தும் நடத்துகிறது….

இந்த பூ புனித நீராட்டு விழாவை இப்ப யாரும் எளிமையாக வைப்பதில்லை என்றால் அவர்களுக்கு ஒரு கௌரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்….

Read Previous

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 94 பேர் உயிரிழப்பு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Read Next

சாலையில் தூங்கியவர் மீது கார் ஏற்றி விபத்து..!! படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular