• September 12, 2024

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?.. இதற்கான தீர்வுதான் என்ன?..

பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம்.
“மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு” என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி ஏன் வருகிறது?
இதற்கான தீர்வுதான் என்ன? நமக்கு தெரியாத உண்மைகளைப் பற்றி சில அறிவோம். ஞாபக மறதிக்கான காரணங்கள் என்ன?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஞாபகமறதி வருகின்றது.

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன…? தூக்கமின்மை
நாம் தூங்குவது 6 மணி நேரமாக இருப்பினும்
நம்மில் பலபேர் ஆழ்ந்து நிம்மதியாக உறங்குவது கிடையாது.
புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றினால் நம் மூளையில் சாதாரணமாக சுரக்கக்கூடிய சுரப்பிகள் குறைவாக சுரப்பதால் ஞாபக மறதி அதிகம் ஏற்படும்.
தூங்குவதற்கு முன்னால் அதிகமாக தொலைபேசி பயன்படுத்துவது.
அதுமட்டுமில்லாமல் நாம் எந்நாளும் நடப்பது குறைவு ஏதோ ஒரு முறையில் நடக்க வேண்டிய அவசியம் வந்தால் கூட நாம் நடப்பதில்லை இக் காரணத்தினாலும் ஞாபகமறதி வரக்கூடும்.
பச்சைக் காய்கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளாமல் இருப்பது. இவை அனைத்தும் ஞாபகமறதிகாண முக்கிய காரணங்களாகும்.

ஞாபக மறதியை போக்குவதற்கான வழி என்ன…?
ஞாபக மறதி காண உணவு முறைகள் எவை என்றால் முளைக் கட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது. இதை சாப்பிட்டால் நம் மூளையில் உள்ள ஞாபகசக்தி தன்மை கூடும்.
பச்சைக் காய்கறிகள் பச்சை பழங்கள் கீரை வகைகள் அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்ல தீர்வு தரும்.
வல்லாரை பொடி, துளசி பொடி, சுக்குப்பொடி, வசம்பு பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம், கோஷ்டம், ஓமம், திப்பிலி, மரமஞ்சள், சீரகம் மற்றும் இந்துப்பு போன்றவற்றை சேகரித்து உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த மருந்துகளில், வல்லாரையும், துளசியும் மற்ற மூலிகைகளைவிட, இரு மடங்கு அதிக அளவில், இருக்க வேண்டும்.பின்னர் இவை அனைத்தையும் சேர்த்து, அரைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளில் சிறிதளவு எடுத்து, தினமும் இருவேளை சாப்பிட வேண்டும், நெய் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
தொடர்ந்து தினமும் இருவேளை, இந்த மருந்தை நாற்பத்தெட்டு நாட்கள் விடாமல் சாப்பிட்டு வர ஞாபக மறதி முற்றாக நீங்கி விடும்.
கரு மஞ்சள் நாம் சாப்பிடும் கறி வகைகள் சாப்பாடு வகைகளில் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
சில எளிய மனப் பயிற்சிகளின் மூலம், நாம் நினைவாற்றலை மேம்படுத்த முடியும் என்றாலும் கூட, உடல் வலுவாக, இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். முறையான உடற்பயிற்சிகளை, தினமும் சிறிது நேரம் செய்து வர வேண்டும். இது, உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, உற்சாக மனநிலையை உருவாக்கும்.
தூங்குவதற்கு முன் அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு நாம் எந்தவித தொலைபேசி தொலைக்காட்சி பார்க்காது இருப்பது நல்லது. அதில் உள்ள வெளிச்சம் நம் கண்களை பாதிக்கும்.
இரவில் நம் மூளையில் சுரக்கக்கூடிய சுரப்பிகள் வெளிச்சத்தினால் குறைந்து காலையில் நாம் எழும்போது நாம் மூளை சோம்பேறி குணம் அண்டி எழும்ப வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் இதுவே!
மேலும் நம்மில் பல பேர் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையாகின்றோம்.

இப்பழக்கத்தை தவிர்ப்பது மிக சிறந்ததாகும். புகைப்பிடித்தல் ,மது அருந்துதல் போன்ற பழக்கத்தினால் நம் மூளையில் சுரக்கக்கூடிய சுரப்பிகள் சற்று குறைவாக காணப்படும். ஆப்பிள், திராட்சை, பேரிட்சை மற்றும் வெண்டை, நெல்லிக்காய், புதினா, பூண்டு மற்றும் கேரட், பீட்ரூட் போன்ற பழ, காய்கறி வகைகளை அடிக்கடி, உணவில் சேர்த்து வரலாம். மேலும், பாதாம் பருப்பு மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர, மூளையின் ஆற்றல் அதிகரித்து, நினைவாற்றல் சக்தி கூடும்.

Read Previous

மாரடைப்பு யாருக்கு அதிகமாக வருகிறது?.. ஆண்களுக்கா?.. பெண்களுக்கா?..

Read Next

ஜாதிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular