வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனவரி 3 அன்று அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதை அவர் ‘மைல்கல் சாதனை’ எனப் பாராட்டியுள்ளார். டிரம்ப் தகுதியானவர் என்றும், கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அவரது நடவடிக்கை மனித குலத்திற்கானது என்றும் மச்சாடோ கூறியுள்ளார்.




