யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!

 

 

கர்நாடகாவின் மண்டியா பகுதியில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.4 லட்சம் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மூதாட்டியின் வீட்டில் கிடைத்த பணம் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் தனக்குக் கிடைத்த ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்ட நிலையில், மற்றொருவர் கிடைத்த ரூ.2.4 லட்சத்தை மசூதிக்கு நன்கொடையாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படும் இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

இலங்கையை திணறடிக்கும் இந்திய பந்துவீச்சு!

Read Next

தூத்துக்குடியில் பரபரப்பு: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular