
நம் அன்றாட வாழ்வில் பலரும் பண தேவை நிறைவு செய்வதற்காக தங்கள் வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைப்பது என்பது காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைப்பது என்பது நம் வீட்டில் உள்ள மகாலட்சுமியை கொண்டு போய் கடையில் அடகு வைப்பதற்கு சமம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு தங்க நகைகளை அடமானம் வைப்பது தவறு என்றாலும், சில நேரங்களில் நடக்கும் அவசர தேவைகளுக்கு நாம் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்நிலையில் எந்த நாட்களில் தங்க நகைகளை அடமானம் வைக்கலாம். எந்த நாட்களில் தங்கம் நகைகளை அடமானம் வைக்க கூடாது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நாலும் நட்சத்திரமும், கோளும் கோள்களும் நமக்கு செய்யாத ஒரு நல்ல விஷயத்தை வேறு எதுவும் நமக்கு செய்யப் போவதில்லை என்பதுதான் அர்த்தம். அதனால் எந்த ஒரு சுபகாரியத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து தான் அதை செய்வார்கள். அது போன்று தான் நாம் நகைகளை அடமானம் வைக்கும் போதும் நாள் நட்சத்திரம் பார்த்து தான் அடமானம் வைக்க வேண்டும். இப்படி வைத்தால் தான் நாம் அதை மீண்டும் மீட்ட விட முடியும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக, ஒருவருடைய ஜனன நாள் என்பது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஆகவே பிறந்தநாள் மற்றும் ஜனன நட்சத்திரத்தில் தவறியும் நகையை அடமானம் வைத்து விடாதீர்கள். மற்றும் செவ்வாய் வெள்ளி போன்ற கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் நகையை அடமானம் வைப்பது நல்லதல்ல. மேலும் குளிகை நேரத்தில் கட்டாயம் நகையை அடமானம் வைக்கக் கூடாது. நல்ல நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் நகையை அடமானம் வைக்க கூடாது. குறிப்பாக புலிகள் நகையை அடமானம் வைத்தால் அடிக்கடி நகையை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படுமாம். மேலும் அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதேசி போன்ற நாட்களில் நகையை அடமானம் வைக்க கூடாது.