பொதுவாக மக்கள் அனைவரும் தண்ணீர் பருகுவதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். அத்தகைய பிளாஸ்டிக் பாட்டில்களில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று தற்போது மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு சாதாரண மனிதனில் இருந்து குழந்தைகள் வரை தண்ணீர் குடிக்க பாட்டில்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது மைக்ரோ பிளாஸ்டிக் மனிதனின் ரத்த ஓட்டத்தில் கலப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் அல்லாத பாட்டில்களில் தண்ணீர் குடிக்கும் போது ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ரத்த ஓட்டத்தில் இருக்கும் நுண்துகள்களின் அளவு குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.