தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!!

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது..

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பா. பாண்டியன் திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார், தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ராயன் தனுஷின் ஐம்பதாவது படமாக ராயன் திரைப்படம் உருவாகியுள்ளது, இதை அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார், இதற்கிடையே தனுஷ் தனது 52வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார், தனுசு இயக்கம் 4 படமாகும் இத்திரைப்படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார், இத்திரைப்படத்திற்கு இட்லி கடை என பெயரிடப்பட்டுள்ளது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகிருந்ததும் குறிப்பிடத்தக்கது..!!

Read Previous

200 தொகுதிகளில் நிச்சய வெற்றி முதல் மு.க ஸ்டாலின் நம்பிக்கை..!!

Read Next

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular