
🔺️ உங்களால் விட்டுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களால் மன்னிக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் விரும்பிய ஒன்றை பிறருக்காக தியாகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் சுகம் மட்டும் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் உங்கள் இஷ்டப்படி மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள்
திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல்
கண்டபடி செலவழிப்பவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
🔺️ நீங்கள் நினைத்தது மாத்திரம் தான் நடக்க வேண்டுமென்ற கோட்பாட்டகல் நீங்கள் இருந்தால் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களுக்காக மாத்திரம் வாழ வேண்டும் என்ற சுயநலம் கொண்டவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ திருமணம் என்பது நம் குணாதிசயங்கள் சோதிக்கப்படும் ஒரு பாசறையாகும்.
🔺️ திருமணம் என்பது, நாம் நமக்காக மட்டும் வாழும் வாழ்க்கையல்ல, நம்மோடு கை கோர்த்து வருவோருக்காகவும் வாழ்வதாகும்.
🔺️ திருமணம் என்பது பணிகளையும் அர்ப்பணிப்புக்களையும் பரிமாறிக் கொள்வதாகும்.
🔺️ தன் சுகத்தையும், தன் திருப்த்தியையும் மாத்திரம் பார்ப்பவர்கள் பயணத்தின் நடுவில் சோர்வடைந்து விடுவார்கள்.
🔺 ️திருமணம் என்பது ஒரு அழகான பந்தம் தான். ஆனால், யாரும் அது இலேசான பந்தம் என்று சொல்லவே இல்லை.