பச்சை மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?
பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது.நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது பச்சை மிளகாய்.பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது.ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும், இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை, தலைமுழுகி வந்தால் எந்த வகையான தலைவலியும் குணமாகும்.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.




