பெண்கள் வெல்லம் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா..??

Oplus_131072

பெண்கள் வெல்லம் சாப்பிடுவது மிகவும் நல்லது.வெல்லத்தின் நன்மைகள் ஏராளம் தாராளம். அவற்றின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.இரும்புச் சத்து வெல்லத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில நோய்களுக்கான மருந்தில் வெல்லத்தைப் பயன்படுத்துகிறார்கள்.ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

வெல்லம் நம் இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும்.பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது.

வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் எல்லாம் நம் உடலில் ஏற்படும் பல நோய்களை தடுக்கிறது.

 

Read Previous

பச்சை மிளகாயில் கூட மருத்துவ குணங்கள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

அண்ணன் மற்றும் தம்பி உறவில் உள்ளவர்கள் செய்யக்கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular