நம் அன்றாட வாழ்வில் வீடு என்பது முக்கியமான ஒன்று. அத்தகைய வீட்டில் நாம் வாழும் பொழுது உடல் சோர்வு உடல் சம்பந்தமான நோய்கள் மற்றும் வீட்டில் பல பிரச்சினைகள் போன்ற பல தொந்தரவுகள் காணப்பட்டால் அதற்கு வீட்டில் உள்ள வாஸ்து சரி இல்லை வாஸ்து தோஷங்கள் என்று ஒரு காரணமாக கருதுவர். வாஸ்து சாஸ்திரங்களின்படி சரியாக நாம் செய்தால் உடல் நல பிரச்சினை தவிர்க்கலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
நாம் உறங்கும் படுக்கைக்கு அடியில் இதை வைத்தால் போதும் பிரச்சனையே இல்லாமல் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைக்கும் அது என்னவென்று தற்போது பார்க்கலாம். நம் உறங்கும் தலையணையின் கீழ் மனம் கொண்ட பூக்களை வைத்து தூங்கினால் இரவு தூக்கம் வருவதுடன், மன நிம்மதி அதிகரித்து மன அழுத்தம் குறைந்து திருமண வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் தலையணை கேக்கில் நாணயத்தை வைத்து தூங்கினால் மிகவும் நல்லதாம்.மேலும் தலையணைக்கு கீழ் ஏலக்காய் வைத்து தூங்கினால் இதனுடைய இனிமையான நறுமணம் நல்ல தூக்கத்தையும் மன அழுத்தத்தையும் போக்கி மனநிம்மதியை பல மடங்கு தரும் சக்தி உடையது. மேலும் ஒரு சிலருக்கு உறங்கும் போது தேவையில்லாத பயமுறுத்தும் வகையில் பல கெட்ட கனவுகள் வரும் இதை வராமல் தடுக்க தலையணைக்கு அடியில் இரும்பினை அல்லது இரும்பினால் ஆன சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு தூங்கினால் நமக்கு வரும் கெட்ட கனவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு செய்தால் நம் வீட்டில் பிரச்சனை இல்லாமல் மகிழ்ச்சி பொங்கும்.




