நம் அன்றாட வாழ்வில் அனைவரும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வேலை பார்த்து வரும் பொழுது நமக்கு இளைப்பாற ஒரு வீடு என்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் நாம் ஒரு புது வீட்டிற்கு செல்லும் போது ஏன் பால் காய்ச்சுகிறோம் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி புதிதாக ஒரு வீட்டிற்கு செல்லும் பொழுது நாம் பால் காய்ச்சு விட்டுத்தான் அந்த வீட்டில் குடியேறுவோம். இது பாரம்பரியாக நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகும். மற்றும் வாஸ்து பார்த்து பூஜையும் நடத்தி பின்பு அந்த வீட்டில் குடியேறி நாம் அன்றாட வாழ்க்கையை தொடங்குவோம். இந்நிலையில் பால் காய்ச்சும் போது எப்போது பொங்கி வலிய வேண்டும் பொங்கி வலியும்போது கிழக்கு திசை நோக்கி பால் பொங்க வேண்டும் என்றும் சொல்வார்கள். பால் என்பது தூய்மையை குறிக்கும் ஒரு அடையாளமாகும். இது ஒரு புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது. மேலும், இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதை குறிக்கும் அதனைப் போலவே வீட்டில் பால் நன்றாக நிரம்பி வழிந்தால் ஆரோக்கியம் செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை பொங்கி வலியும் என்று நம்புகின்றனர். இவ்வாறு செய்வதால் வீட்டில் மற்றும் குடும்பத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல் அகன்று நேர்மறை நோக்கத்தை உண்டாக்க புதுமனை வீட்டில் பால் காய்ச்சுகிறார்கள்.




