விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறுபடும் என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரே கிரகத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மேலோங்குவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து எளிதாக பணியாற்ற வேண்டும் என்பதை விண்வெளி பயணம் உணர வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது மிகவும் முட்டாள்தனமாக தோன்றும் என தெரிவித்துள்ளார்.




