பெண்கள் தனி குடித்தனம் போக ஏன் நினைக்கிறார்கள் தெரியுமா..??

• தற்போதைய பெண்கள் ஏன் தனிக்குடித்தனம் போகவே நிர்பந்திக்கிறார்கள்?

• பிரைவஸி தான் முதல் காரணம். கூட்டுக்குடும்பத்தில் பிரைவஸியே இருக்காது. கணவனிடம் பேசவோ கொஞ்சவோ முடியாது.

• எது செய்யறதுனாலும் பர்மிஷன் வாங்கிக்கிட்டேயிருக்க வேண்டும் சின்ன குழந்தைகள் மாதிரி.

• நாம எடுக்குற முடிவை தைரியமா செய்யலாம். அது தப்பு, இது தப்பு அப்படி பண்ணுன்னு யாரோட கட்டளைக்கும் அடி பணிய வேண்டாம்.

• சமையல்காரிக்கு சப்ஸ்ட்யூட்டாக இருக்க வேண்டாம். வீட்டுக்கு வந்த மருமகள் தான் எல்லா வேலையும் பண்ணணும்னு யாரு கண்டுப்பிடிச்சான்னு தெரியலை. வேலைக்கு ஆள் வைக்குற வசதியிருந்தாலும் வைக்க மாட்டாங்க போலருக்கு.

• பணம் வரவு செலவுகளை பார்த்து கொள்வதால் எல்லாம் தெரிஞ்சிக்குற வாய்ப்பு இருக்கு. குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை கற்று கொள்ளலாம்.

• பெண்ணுக்கும் வேறு ஒரு வீட்டுக்கு போய் இருக்கோம்ங்குற சங்கோஜம் வராமல் இருக்கும்.

• உங்க குடும்பம், எங்க குடும்பம்னு இல்லாமல் நாம ரெண்டு பேரும் இப்போ ஒரே குடும்பங்குற பொறுப்பு வரும்.

• மாமியார் மருமகள் சண்டை வந்துடுமோன்னு பயப்படுறாங்க. தள்ளி இருப்பதே நல்லதுன்னு நினைக்குறாங்க.

• பிள்ளைகள் வளர்ந்துட்டாங்கங்குறதை புரிஞ்சிக்காத நிறைய பெற்றோர்கள் இன்னும் இருக்காங்க. எல்லா விஷயத்திலும் வந்து மூக்கை நுழைப்பது.

• ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கலைன்னு பிரஷர் குடுப்பது. இப்படி தான் உங்க வீட்டுல சொல்லி கொடுத்தாங்களான்னு குத்தி காட்ட வேண்டியது. அதையெல்லாம் தடுக்க தான் தனி குடுத்தனம் போறாங்க.

Read Previous

1940-1980 பிறந்தவர்கள் அனுபவித்த மறக்கமுடியாத அனுபவங்கள்..!! அது ஒரு கனாக்காலம்..!!

Read Next

மூத்தோர் சொல் வார்த்தையும்.. முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்பதை உணர வைக்கும் பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular