
பொது இடங்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்..
• பேங்க் – ல் வந்து பேனா கடன் கேட்பது.
• பொது இடம் என்றும் பாராமல், ஃபோனில் சத்தமாகப் பேசுவது.
• கேவலமான ரிங்டோன்களில் ஃபோனை அலற விடுவது.
• கூட்டத்தில் முண்டியடிப்பது. வேண்டுமென்றே மிதிப்பது தள்ளுவது.
• திருமண விருந்துகளில் இடம் பிடிக்க, சாப்பிடுபவர்களின் அருகிலேயே காத்திருப்பது.
• வரிசையில் நிற்காமல், யாரிடமாவது கெஞ்சி, குழைந்து டிக்கெட் வாங்குவது.
• எச்சில் துப்புவது.
• சிறுநீர் கழிப்பது.
• குப்பையைக் கொட்டுவதும்
• சத்தமாக மனைவியைத் திட்டுவது.
• முக்கியமான ஒரு கால் செய்யணும் என்று சொல்லி, யாரிடமாவது ஃபோனை வாங்கி கதை பேசுவது.
• அட்ரஸ் கேட்டுவிட்டு, சொன்ன திசைக்கு எதிர்திசையில் செல்வது.
• சிலர் கூப்பிடக் கூப்பிட கண்டு கொள்ளாத மாதிரி செல்வது.
• டிஸ்கவுண்ட் கேட்பது.
• அழுக்குக் காலோடு எதிர் இருக்கையில் கால்களை வைப்பது.
• தூக்கத்தில் அடுத்தவர் தோள் மீது அடிக்கடி சாய்ந்து கடுப்பேற்றுவது.
• சாலையில் தேங்கிய தண்ணீரின் மீது வேகமாக வண்டிகளை ஓட்டி, பாதசாரிகள் மீது வாரியடிப்பது.
• புகை பிடிப்பது.
• பசி என்று வரும் குழந்தைகளுக்கு
உணவு கொடுக்காமல் பணம் கொடுப்பது…….
இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்…