மாதவிடாய் காலத்தில் இந்த வலிகள் எல்லாம் உங்களுக்கு உள்ளதா..? அலட்சியமா எடுத்துக் கொள்ள வேண்டாம்..!!

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் வலி, கை, கால் வலி ஆகியவை ஏற்படும். ஆனால் சில சமயங்களில் சாதாரணமாக இல்லாத சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றது, அது என்னென்ன என்பது குறித்து இப்ப பதிவில் தெளிவாக காண்போம்.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தில் கீழ் பகுதியில் கடுமையான வலியை அனுபவித்தார் அது சாதாரணமாக நினைக்க கூடாது. ஏனென்றால் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அபாயத்தை அதிகரிக்கும் .மேலும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. உங்கள் மாதவிடாய் முடியும் வரை இந்த விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யலாம்.‘

மாதவிடாயின் பொழுது உங்களுக்கு அதிக அளவு இரத்தப்போக்கு இருந்தால் ஒவ்வொரு மணி நேரமும் பேட்களை மாற்ற வேண்டும். இது உங்கள் கருப்பையில் தொற்று அல்லது புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கின்றது. அதனால் இந்த சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இரத்த கட்டிகள் வெளியேறினால் பிசிஓஎஸ், தைராய்டு மற்றும் அடினோமயோசிஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ரத்த உறைவு ஒரு நாணயத்தின் அளவை  விட பெரிதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் கீழ் முதுகில் கடுமையான வலியை அனுபவித்தார் கருப்பை சுருக்கம், இடுப்பு நெரிசல் தவறான தோரணையில் உட்காருதல் போன்றவை ஏற்படும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் செரிமான பிரச்சனை மலம் கழிக்கும் போது பிரச்சனை ஆகியவை இருந்தால் அதை அதிகரித்த புரோஜெஸ்டிரோன், ஹார்மோன் எண்டோமெட்ரியோசிஸ் அல்லது ஏதேனும் ஆரம்ப அறிகுறிகளாக கூட இருக்கலாம். எனவே இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நன்று.

Read Previous

திமுகவிற்கு மேலும் நெருக்கடி கொடுத்தார் திருமாவளவன்..!! அடுத்தடுத்த பேட்டி அதிர வைக்கும் அறிவிப்பு..!!

Read Next

தட்டி தூக்கி செல்லும் “நந்தினி சரியும் ஆவின்..!! கேள்வி எழுப்பும் பால் முகவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular