மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.2,05,700/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Interpreter பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Interpreter தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:

SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM – அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Others / Unreserved categories – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

In-Service candidates – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Interpreter ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-22 அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

Examination fee – ரூ.1000/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)

Interpreter தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20NO.233%20OF%202024.pdf

Read Previous

அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகை..!!

Read Next

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular