
வர வர மாமியார் கழுதை போல் ஆனார்..!! உண்மையான விளக்கம் என்ன தெரியுமா?..
“வர வர மாமியார் கயிதை போல ஆனார்” என்பதே சரி. இதில் கயிதை என்னும் சொல்லுக்கு பொருள் ஊமத்தங்காய். இந்த ஊமத்தங்காயானது பூவாக இருக்கும்போது அதை பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால் நாட்கள் ஆக ஆக, இந்த ஊமத்தம்பூ காயாக மாறி அதை சுற்றி முட்கள் இருப்பது போல இருக்கும். இது விடமும் கூட. இது போல, மாமியார் ஆரம்பத்தில் மருமகளிடம் அன்பாக பேசினாலும், போக போக கொடிய சொற்களை (கயிதை போல) பயன்படுத்துவாள்.