வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுவையான இட்லி பொடி செய்வது எப்படி.. என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இட்லி மிளகாய்ப் பொடி –
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் – 100 கிராம் உளுத்தம் பருப்பு – 100 மில்லி கடலைப்பருப்பு – 100 மில்லி பெருங்காயம் – புளியாங்கெட்டை அளவு எள்ளு – ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் – அரை தேக்கரண்டி உப்பு – தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும்.
இவ்வாறு நாம் வீட்டிலேயே சுவையான இட்லி பொடி செய்யலாம். இந்த இட்லி பொடியுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இட்லியை வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான்.




