வீட்டில் இருந்தபடியே சில இயற்கை மருத்துவங்கள் நமது உடலையும் முகத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாக வைக்கும்..
அவற்றில் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதற்கு பச்சை பயிறு மாவை எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும், காது அடைப்புக்கு தூதுவளை பால், பாலில் தூதுவளை இலையை ஊறவைத்து காய்ச்சி குடித்து வர காது அடைப்பு சரி ஆகும், மைக்ரேன் தலைவலி காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி குறையும் இதை சில மாதங்கள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும், சீதாப்பழம் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த முடியும் இதனால் ரத்த சோகை பிரச்சனை வராது, அதேபோல் சப்போட்டாவை சாப்பிட்டால் ஜலதோஷம் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் சப்போட்டாவை சாப்பிடுவதால் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வெங்காயச் சாறு முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து முடியில் தடவினால் முடி உதிர்வது நின்றுவிடும் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வலுவாகும் இருக்கும், மேலும் வெங்காய சாறு முடியில் உள்ள பொடுகை நீக்கும்..!!




