
வீட்டில் வளரக்கூடிய செடிகளைப் பற்றி அவசியம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்…
இந்த பெயருக்கு ஏற்றார் போல் சில இலைகளை பறித்த உடனே நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடிய செடிகளை தான் இந்த சமையலறை தோட்டத்தில் வைக்கக்கூடிய செடிகள் என்று கூறப்படுகிறது, செடிகள் அப்படி நமது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய செடிகள் சிலவற்றை நம் தோட்டத்தில் வைத்து பார்ப்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அப்படி என்னென்ன செடிகளை வளர்த்தால் நமக்கு என்ன பயன் என்று பார்ப்போம், புதினா ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த புதினா செடியை வளர்ப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது ஏனெனில் இது காரமான சமையலிலும் இனிப்பு வகையிலும் சேர்க்கக்கூடியது இதன் மனம் மற்றும் சுவை சமையலுக்கு மிகவும் அவசியமான ஒன்று செரிமான மேம்படுதல் போன்ற மருத்துவ நன்மைகளையும் இந்த இலைகள் நமக்கு கொடுக்கிறது, மல்லி இலைகள் நாம் செய்யும் சமையலில் கிரேவி சால்ட் போன்ற உணவுகளில் இந்த மல்லி இலைகள் சேர்க்கப்படுகிறது. இது நமது உணர்வுக்கு ஒரு தனித்துவமான சுவையை மற்றும் மனத்தினை கொடுக்கிறது மேலும் இந்த செடிகளை பராமரிப்பது மிகவும் எளிதான ஒன்றுதான்,கருவேப்பிலை ஒட்டுமொத்த இந்தியா சமையலில் இன்றியமையாத ஒரு பொருள் என்றால் நாம் இந்த கருவேப்பிலையை கூறலாம். இதனை அனைவரது வீட்டிலும் பார்ப்பது மிகவும் உதவியாக இருக்கும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது, ரோஸ் மேரி வீடுகளில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகளில் இந்த ரோஸ்மேரி செடியும் ஒன்றாகும் இது நமது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் மேலும் இது ஒரு சில கிரேவிகள் மற்றும் சூப்புகளில் சேர்க்கப்படுகிறது, துளசி துளசி இலைகளை நமது இந்தியாவில் சளி ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளுக்கு ஒரு மருந்தாக பரிந்துரைக்கின்றனர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த துளசி செடிகளை நாம் வீட்டில் வளர்ப்பது அவசியம் மேலும் இது இத்தாலிய உணவு வகைகளில் சேர்த்து சமைக்கப்படுகிறது, கொத்தமல்லி கொத்தமல்லி செடிகளையும் நம்மால் வீட்டில் சுலபமாக பார்க்க முடியும் எந்த ஒரு உணவின் சுவை மற்றும் மனத்தினை அதிகரித்து கொடுக்கும் தன்மை இந்த கொத்தமல்லி தலைகளுக்கு இருக்கிறது ரத்த விருத்தி போன்ற மருத்துவ நன்மைகளையும் நம்மால் இந்த இலைகளில் இருந்து பெற முடியும், பிரியாணி இலை அசைவ உணவுகளில் அதன் சுவை மற்றும் மனத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த பிரியாணி இலைகள் சமையலில் சேர்க்கப்படுகிறது ஒரு சிறிய செடியை எடுத்து சூரிய வெளிச்சம் நடுத்தரமாக இருக்கும் இடத்தில் வைத்தால் இது நன்கு வளரும்..!!