வெண்டைக்காயை இப்படி செய்து பாருங்கள்..!! அசத்த வைக்கும் செய்முறை..!!

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் வெண்டைக்காயில், நாம் சுவையான காரக்குழம்பு, சாம்பார், பொரியல், சிப்ஸ் என பல செய்முறைகளை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சூடான சாதத்திற்கு ஏற்ற வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி என இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை:

வெண்டைக்காய் – 1/2 கிலோ,

கடலை பருப்பு – 2 கரண்டி,

உளுந்தம் பரப்பு – 2 கரண்டி,

வரமிளகாய் – 4 முதல் 6 (காரத்திற்கேற்ப),

பெரிய வெங்காயம் – 3,

பூண்டு – 6,

புளி – சிறிதளவு,

கடுகு – 2 கரண்டி,

பூண்டு – 10,

கறிவேப்பில்லை – சிறிதளவு,

உப்பு & எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் முக்கால் பதம் வேகவைத்து எடுக்க வேண்டும்.

பிறகு கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இவை சூடு ஆறியதும் ஜாரில் போட்டு வெண்டைக்காயுடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். உப்பும் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.

கடைசியாக கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அப்பளம், சோற்று வடகம் போன்றவை இதற்கு அருமையான சைடு டிஷ் ஆகா  இருக்கும்.

Read Previous

தேங்காய் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Read Next

அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular