ஃப்ரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீர் குடிப்பவர்கள் நீங்கள்..!! அப்போ உங்களுக்கு தான் பேராபத்து..!!
வெயில் காலத்திலும் சரி அல்லது கடுமையாக சுற்றித்திரிந்தபின் அல்லது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த பின்னரும் பலரும் பிரிட்ஜில் வைத்த நீரை தான் குடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்த பிரிட்ஜில் வைத்த நீரை குடிக்கும் பழக்கம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கவும் இதய பாதிப்பை ஏற்படுத்தவும் மலச்சிக்கல் பிரச்சனைகள் போன்றவற்றை இது ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குறிப்பாக குழந்தைகள் வரை குளிர்ந்த நீரை குடிக்க தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில், குளிர்ந்த நீர் இதயத் துடிப்பை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் கழுத்து நரம்புகளை பாதித்து இதயத்துடிப்பை இது மிகவும் குறைக்க இயலுமாம். மேலும் இந்த குளிர்ந்த நீர் குடிப்பதால் சுவாச பிரச்சனைகள் மற்றும் சளி இருமல் தொண்டையில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி குளிர்ந்த நீர் குடிப்பதால் மண்டையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.




