ஃப்ரிட்ஜ் என்பது இப்போதுதான் ஒரு வீடு தவறாமல் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது. ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பிரிட்ஜ் என்பது அவ்வளவு பெரிதாக யார் வீட்டிலும் இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது. அப்போது வெயில் காலத்தில் நீரை குளிர்விக்க இந்த முறையை தான் பின்பற்றுவார்கள். ஆனால் இன்றோ பிரிட்ஜில் வைத்து நீரை குளிர்வித்து குடிக்கத்தான் இன்றுள்ள இளம் தலைமுறை விரும்புகின்றார்கள். இந்நிலையில், பிரிட்ஜ் இல்லாமலே நீரை குளிர்விக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இன்றுள்ள தலைமுறையினர் முற்றிலுமாக மறந்த ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றுதான் இந்த மண்பானை நீர் குடிப்பது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் மண்பானை நீர் குடித்து அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் எந்த வித உடல் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மண்பானை தண்ணீர் குடிப்பது மிகவும் பல நன்மைகளை தருகிறது. மண் பானையில் இருக்கும் நீர் இயற்கையாகவே குளிர்ச்சியான நீராக இருக்கும். மண்பானையில் இருக்கும் சிறுதுளை வழியாக தண்ணீர் கசிந்து வெளியேறும் போது பானையின் வெப்பம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். மேலும், பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களில் நீரை வைக்கும் பொழுது அது இயற்கையாகவே மதிய நேரத்தில் சூடாகும் தன்மை கொண்டதாக இருக்கும் ஆனால் மண்பானை நீர் குடித்தால் அமிர்தம் போல இருக்கும் ஏனென்றால் மண்பானையில் இயற்கை முறையில் நீர் குளிர்விக்கப்படுகிறது மண் பானை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. ஏன் மண்பானையில் இருக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கிறது என்று தெரியுமா. மண்பானை களிமண் காரத் தன்மை கொண்டது என்பதால் தண்ணீரை சமநிலைப்படுத்துகிறது. மற்றும் மண்பானையில் இருக்கும் இயற்கையான தாதுக்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு முக்கிய பங்கு வருகிறது. இதனால் அனைவரும் மண்பானையை வாங்கி அதை நீரை ஊற்றி பயன்படுத்துங்கள்.




