நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

 

டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து எதிர்த்து வந்தது திமுகதான் என கூறியுள்ளார்.

மேலும், சமூக நீதியை பாதுகாக்கும் தமிழகத்தின் ஒரே கோரிக்கை, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்வதே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அதனை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Previous

நீட் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை..!!

Read Next

அசாமில் கனமழை, வெள்ளப் பெருக்கு: 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular