அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்லக்கூடாது ஏன்?..

நாம் உண்ணும் உணவுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும் காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.

பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்கு செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சம சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சம சக்திகள் உணரும் ஆற்றல் குறைக்கும் சக்தி படைத்தவை. எனவேதான் கோயிலுக்கு செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள் ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பின்னர் கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் சாப்பிட்ட மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது.

Read Previous

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருமகளே..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

வாழைப்பூவின் ரகசியங்கள்.. 50+ வயதுக்குப் பிறகு ஆரோக்கியத்தை மாற்றும் சூப்பர் உணவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular