அடக்கம் அமரருள் உய்க்கும்..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Oplus_131072

‘அடக்கம் அமரருள் உய்க்கும் ‘

ஒருமுறை, திருப்பதி திருமலைக்கு வருகை தந்தார் ராமானுஜர். அவரை வரவேற்க அவரது குருவும், தாய்மாமனுமான பெரிய திருமலை நம்பி, சடாரி, தீர்த்தம் சகிதமாக காத்து நின்றார்.

அதைக் கண்டு உள்ளம் உருகிப் போன ராமானுஜர்,அவரது பாதங்களில் விழுந்து பணிந்தார். “இந்த தள்ளாத வயதில் தாங்கள் என்னை வரவேற்க வர வேண்டுமா! வேறு சிறியவர் யாரையாவது அனுப்பியிருக்கக் கூடாதா,” என்றார்.

“ராமானுஜரே! இந்த திருமலை முழுவதும் அலைந்து திரிந்தேன். என்னை விட சிறியவர் எவரும் என் கண்ணில் படவில்லை,” என்றார். இந்தப் பதில் கேட்டு ராமானுஜர் உருகிப் போனார்.

எவ்வளவு பெரிய மனிதனாக, எவ்வளவு பணக்காரனாக, அதிகாரத்தில் உள்ளவராக இருந்தாலும், பணிவும், கனிவும் வேண்டும். தன்னைச் சிறியவனாகவே கருத வேண்டும்.

இதனால் தான் திருவள்ளுவர்,
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்” என எழுதினார்.

பணிவைப் பழகுங்கள். உலகம் உள்ளளவும் உங்கள் குணம் பற்றி, உங்கள் வம்சத்தார் பேசி மகிழ்வார்கள்.

 

Read Previous

நீங்கள் சிங்கமா அல்லது ஆடா..?? சுவாமி விவேகானந்தரின் வியக்க வைக்கும் உவமைக் கதை..!!

Read Next

தாய்மாமன் உறவு பற்றிய அற்புதமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular