அடி ஆத்தி இதுதானா அந்த அர்த்தம்..!! குந்தாணி என்றால் என்ன..??

Oplus_131072

அடி ஆத்தி இதுதானா அந்த அர்த்தம்.

குந்தாணி என்றால் என்ன?

இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும்! ஆனால்…

குந்தாணி – என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என அகராதிகள் கூறுகின்றன.

உ லக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற – புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்!

குத்துதல் = உலக்கையாற் கூலத்தைத் துவைத்து, இடித்து நொறுக்குதல்.

மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி – புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது – குந்தாணி.

முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது.

உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பூண் போடப்பட்டிருக்கும். (உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம்) .

பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல் களும் வழக்கில் இருந்தன.

உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள்.

துக்கடா :

இடை சுருங்கி இருக்கவேண்டிய பெண்டியர் இடை பெருத்திருந்தால் – ‘குதிர் போல இருக்கிறாள், குந்தாணி போல் இருக்கிறாள்’ … என்று உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம்.

இது ஒரு நையாண்டி
படித்ததில் ரசித்தது..

Read Previous

நமக்கு வேண்டியதை எல்லாம் தந்த நம் பெற்றொருக்கு ஆறுதல் அரவணைப்பாய் இருக்க வேண்டியது நம் கடமை..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

படித்ததில் பிடித்த கதை..!! மற்றவர்களை ஏமாற்றும் முன் நாமும் ஒரு நாள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular