திமுக அமைப்பு மாற்றங்கள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுகவின் வலிமைக்கு அதன் அமைப்பு முறையே முக்கிய காரணம் என்றும், 75 ஆண்டுகளை கடந்தும் கட்சி வலுவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது மேற்கொள்ளப்படும் அமைப்பு மாற்றங்கள் அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும் எனக் கூறிய ஸ்டாலின், கட்சியில் எந்த தனிநபர் தவறு செய்தாலும், அதன் பாதிப்பு ஒட்டுமொத்த கட்சியையே பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.
கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




