ஸ்வீடனின் மத்திய பகுதியில் உள்ள ஃபேகர்ஸ்டா நகரில் பிரினெல் உயர்நிலைப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்தேக நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். அவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் எனவும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




