சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

 

 

சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பி விடப்படுவதே காரணம் எனக் கூறப்படுவது தவறு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை பயன்படுத்தப்படும் அளவு 2022-23ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் சுமார் 9 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மேலும், தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் சுமார் 75 சதவீதம் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களிலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இதனால் சர்க்கரை விலை உயர்வை எத்தனால் உற்பத்தியுடன் மட்டும் தொடர்புபடுத்துவது சரியானதல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read Previous

தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

Read Next

“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular