தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 100 நாட்கள் தவெகவுக்கு கற்றுக்கொள்ளும் காலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 100 நாள் ஆட்சியில் எந்தத் துறையிலும் லஞ்சம், ஊழல் இல்லை என்ற பெயரை தவெக பெற்றுள்ளதாகவும், பலரும் இதை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து, ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு தவெக சாதனை படைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.




