முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

 

 

சென்னை குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் (27) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (27), வெங்கடேசன் (21), லலித்குமார் (21) ஆகியோருடன் மகேஷ் மது அருந்தியபோது, ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் மகேஷை அரிவாளால் வெட்டியதுடன், தலையில் கல்லைப் போட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார்.

 

தப்பிச் சென்ற ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன், லலித்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Read Next

ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular