கோவை அன்னூர் அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த மகன் பெயரில் பெற்றோர் வாங்கிய ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையில் இருந்து ரூ.10 லட்சத்தை, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி பறித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோகுலகண்ணன், சாமிநாதன், ராசுக்குட்டி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், சாமிநாதன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.




