கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் உறவினர்களிடம் பேசிய விஜய், அவரது தங்கைக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் என உறுதியளித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களுடன் விஜய் பேசியதாக கூறப்படுகிறது.




