அதிமுகவில் புதுக்கோட்டை தெற்கு, தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நீக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




