அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரை கடலூர் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது ரூ.10 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தாக சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பன்னீர்செல்வம், தந்தை, 3 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 571.3% அதிகமாக சொத்துக்குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




