கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தினர் இணைந்து ராமேஸ்வரத்தில் நடத்திய `கச்சத்தீவு மீட்பு’ மாநாட்டில் 2014 துவங்கி கடந்த ஆண்டு வரை 3550 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.




