கார்த்திகேயன் என்பவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர். இவரது மனைவி செல்வி. இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வி தனது தாய் வீட்டில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இதையடுத்து நேற்று முன்தினம் கார்த்திகேயன் செல்வியின் தாய் வீட்டுக்கு சென்று செல்வியை மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு செல்வி மறுத்துவிட்டார். பின்னர் நள்ளிரவு நேரம் பார்த்து செல்வி தனது தாயுடன் கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
இதையடுத்து பதறிய கார்த்திகேயன் படுகாயம் அடைந்து உள்ளார். பின்னர் கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு செல்வியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.




