காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?

 

நம் அன்றாட வாழ்வில் இரவில் தோன்றி காலையில் எழுந்தவுடன் அனைவரும் ஒரு கப் காபியுடன் தான் எந்திரிப்பார்கள். சில பேர் பிரஷ் இல்லாமல் பெட் காஃபி கொடுக்கும் பழக்கத்தை இன்றைய காலகட்டத்திலும் வைத்திருக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் காலை எழுந்தவுடன் பிரஷை விட்டு ஒரு செம்பு தண்ணீரை நன்றாக அருந்துவர். ஆனால் ஒரு சில காபி டீ போன்றவற்றுடன் அந்த நாளை தொடங்குவார்கள். ஒரு சிலர் பிரிட்ஜில் வைத்த நீரை எடுத்து குடித்து அந்த நாளை தொடங்குவார்கள். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குளிர்ந்த நீர் இவற்றையெல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லது.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டுடன் அருந்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. இது உணவுக் குழாயில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமான முறையே எளிதாக்கும். மேலும் மேலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரை குடித்தால் அந்த நீர் உடலில் வெப்பத்தை உயர்த்தி உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உடலில் உள்ள பிஹெச் அளவை மேம்படுத்த இந்த நீர் உதவி செய்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான இளம் சூடுள்ள நீரை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவுகிறது.

Read Previous

அதிர்ச்சி சம்பவம்..!! தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்..!!

Read Next

மக்களே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இதை ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular