அதிஷ்டமாவதும்.. தூரதிஷ்டமாவதும்.. நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது என்பதை உணர வைத்த பதிவு..!!

ஒரு ஏழை குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் தொடர்ச்சியாக பிறக்கிறது, மூத்தப் பெண்ணை “நீ ஏன் பெண்ணாக பிறந்தாய்! நீ பிறந்த பின்புதான் எங்களுக்கு வறுமை”… அடுத்த இரண்டும் பெண் குழந்தை என்று கூறி அவளை தினம் தினம் நோகடித்தனர் அவளின் பெற்றோர்கள்,

மூத்தப் பெண்ணிற்கு திருமண வயது வருகிறது, அவளை எங்கோ கடை வீதியில் கண்ட ஒரு நடுதர வாலிபன் அவள் மீது காதல் கொண்டு முறைப்படி பெண் கேட்டுவர, இவள் இவ்வீட்டை விட்டு போனால்தான் நின்மதி என பெற்றோரும் சம்மதிக்க கண்ணியமான முறையில் திருமணமும் செய்துகொள்கிறான் அந்த இளைஞன்.

திருமணத்திற்கு பிறகு என்னதான் அவள் குடும்பத்திற்கு ஏற்ற மனைவியாக சந்தோசமாக வாழ்ந்தாலும் “அவள் ஒரு “ராசி இல்லாத பெண்!” என்ற ஒரு பெயர் மட்டும் என்றும் அழியாமல் அவள் மனதில் பதிந்தது,

கணவன் வேலைக்கு செல்லும்போது அவள் எதிரே வந்து நிற்கமாட்டாள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அவள் முன்னே வந்து நிற்கமாட்டாள் இதையெல்லாம் கவனித்த கணவன் “ஏன் நீ இப்படி எல்லாவற்றிற்கும் ஓடி ஒழிகிறாய்! நீ என் மனைவி, என் குடும்பத்தின் ஒருத்தி… காரணம் என்ன??? என்று கேட்க…

நான் ஒரு ராசி இல்லாத பெண்! என்னால் என் குடும்பம் சிரமப்பட்டது அதுபோல் என்னால் உங்களின் எந்த முன்னேற்றமும் தடைபடக் கூடாது…” என்று கூறி அழுகிறாள், அவளை பார்த்து மென்மையாக கணவன் சிரிக்கிறான்… நேரம் வரட்டும் என மனதில் சொல்லிக்கொண்டு …

மாதங்கள் பல செல்ல கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது, சம்பளம் அதிகரித்தது புதிதாய் வீடு ஒன்று வாங்கினான், அந்த வீட்டின் கிரகபிரவேசத்திற்கு மனைவியின் பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள், என்று எல்லோரையும் கூப்பிட்டு பெரும் செலவில் எல்லோருக்கும் விருந்து வைத்தான்.

விழாவிற்கு வந்த மனைவியின் தந்தை “என்ன மாப்பிள்ளை புதையல் ஏதாவது கிடைத்ததா!” என்று கேளியாக கேட்க “ஆம் உங்கள் மகள்தான் எனக்கு புதையல் என்று சொல்கிறான்…
அதை கேட்டு கூட்டத்தில் இருந்த எல்லோரும் சிரித்தனர்,

உடனே கணவன் தன் மனைவியின் பெயரை சொல்லி அழைக்கிறான், வழக்கம்போல் சமையல் வேலையில் பரப்பரப்பாய் இருந்தவள் தன் கணவனின் குரல் கேட்டு ஓடி வருகிறாள். “இங்கு வா தங்கமே” என கணவன் கண்களால் பேச… தன் மனைவியின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டு

இன்று என் முன்னேற்றத்திற்கான காரணம் என் மனைவி வந்த இராசிதான்!” என்கிறான்… என் வாழ்வின் அதிஷ்டலஷ்மி இவள்… இப்போதுதான் சரியான இடத்தில் இருக்கிறாள்… இவள் வந்தபின்தான் எனக்கு வீடு கார் பதவி உயர்வு எல்லாமே… என்றான்

தன் கணவனை சடார் என திரும்பி பார்த்தவள் இப்படி ஒரு வார்த்தை யாரும் சொல்லி கேட்காதவள் கண்கலங்க ஆரம்பிக்கிறாள்… ஆமாம் தாழ்த்தபட்டதால் அவள் மனதில் அப்படி ஒரு வலி இருக்கிறது.

எல்லா மனிதர்களுடனும் அதிஷ்டம் கூடவே பிறக்கிறது… அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது நமக்கு அதிஷ்டமாவதும் தூரதிஷ்டமாவதும்..

படித்ததில் பிடித்தது..

 

Read Previous

எந்தெந்த நேரத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாம்..!! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..??

Read Next

பெண்களே இதோ உங்களுக்கான பூஜை அறை டிப்ஸ்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular